Tuesday, July 17, 2012

அறுசுவை - பிரேசிலியன் உணவுகள்

உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான உணவு என்றால் அது பிரேசிலியன் உணவுகள்தான். முதன்முதலில் இப்படி ஒரு ரெஸ்டாரன்ட் சென்ற போது உள்ளே எல்லோரும் கொலை வெறியோடு இருப்பது போல தோன்றியது, என்னென்றால் பட்லர் முதல் எல்லோரும் மாமிசத்தை கத்தி கொண்டு வெட்டிக்கொண்டு இருந்தார்கள். இந்த வகை உணவுகள் barbeque வகையை சார்ந்தது. உங்களுடைய உணவு மேஜையில் ஒரு கொடி அல்லது கார்டு (ஒரு பக்கம் சிகப்பு, ஒரு பக்கம் பச்சை) என்று வைக்கப்பட்டு இருக்கும். நீங்கள் விரும்பும் வரை உணவுகள் உண்ணலாம், உங்களளுக்கு வேண்டாம் என்று தோன்றினால் அந்த கொடியை மடக்கி வைக்கவும் அல்லது கார்டு சிகப்பு நிறம் மேலே தெரிவதை போல் வைக்கவும்.

முதலில் நீங்கள் புபட் முறையில் இருக்கும் சாலடை எடுத்து கொண்டு வந்து உங்கள் இடத்திற்கு வந்த உடன், ஒருவர் ஒரு நீண்ட இரும்பு கம்பியில் நன்றாக தீயில் வாட்டப்பட்ட மாமிசத்தை உங்களிடம் கொண்டு வருவார். அவர் அது என்ன மாமிசம் என்று சொல்லிவிட்டு, நீங்கள் விரும்பினால் தன்னிடம் உள்ள கத்தியை கொண்டு சிறு துண்டை உங்களின் தட்டில் போடுவார். இது போல் மாமிசம் வந்து கொண்டே இருக்கும்....பல பல மாமிச வகைகளுடன்.

உணவின் முடிவில் தேன்  சாற்றில் முக்கிய பைன்ஆப்பிள் ஒன்றை கொண்டு வருவார்கள், ஆகா ஆகா என்ன சுவை தெரியுமா....நிச்சயம் உங்கள் வயிற்றில் இதற்கு சற்று இடம் வைத்திருங்கள்.



இந்த  வகை உணவுகளை நீங்கள் மாமிச விரும்பியாக இருந்தால் மட்டுமே உண்ண முடியும், இல்லையென்றால் உங்களின் பணம் வேஸ்ட்தான். இதை எப்படி செய்கிறார்கள் என்று இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.


பெங்களுருவில் இது போல் ஒரு உணவகம் காண்பது அரிது, ஆதலால் நீங்கள் வெளிநாடு சென்றால் இந்த பிரேசிலியன் உணவகத்தை தேடி பாருங்கள். இந்த உணவை உண்டு விட்டு நீங்களும் உங்களின் கருத்துக்களை பகிருங்களேன்....


2 comments:

  1. Try barbecue nation in bangalore.

    ReplyDelete
    Replies
    1. I tried that Gujaal, but this is far way different from Barbecue nation in Bangalore. Once you try this you won't find Barbecue nation as a good restaurant.
      Thanks for visiting my blog and your comments.

      Looking forward your next visit.

      Delete