Monday, September 24, 2012

அறுசுவை - திண்டுக்கல் நன்னாரி சர்பத்

நல்லா  வெயில் அடிக்கும்போது நீங்க தாகத்துக்கு என்ன சாப்பிடுவீங்க ? கோக், பெப்சி  அப்படின்னு சொல்லாதீங்க...அது எல்லாம் வெளிநாட்டு பானங்கள், உடம்புக்கும் கெடுதல். நம்ம திண்டுக்கல்லுல மக்கள் எல்லாம் சோடா சர்பத் சாப்பிடறாங்க....வாங்க நாமளும் சாபிடலாம் !!


நம்ம ஊரு நன்னாரி சர்பத் சாப்பிட்டு இருக்கீங்களா ? நன்னாரி ” சுகந்த திரவியங்கள்” குழுவில் சேர்க்கப்பட்ட மணமூட்டும் செய்கையுடைய மூலிகை. இதன் பெயரே நல் + நாரி. அதாவது நல்ல மணமுடையது என்று பொருள். இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும். நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள நீங்கள் இங்கே சொடுக்கவும்...நன்னாரி


நான் போன வாரம் திண்டுக்கல் போனபோது வெயில் மண்டையை பொளந்தது...அட ஜூஸ் எதாவது சாபிடலாமின்னு நம்ம திண்டுக்கல் கடைவீதியில் சுத்திக்கிட்டு இருந்தப்ப என் மச்சான் வாங்க சர்பத் சாபிடலாமின்னு கூப்பிட்டான். அட டீக்கடையில்தான் இப்ப சர்பத் வைச்சிருக்காங்க, அவன் நல்ல தண்ணி யூஸ் பண்ணுவானா அப்படின்னு இருகிரப்ப....சர்பத்க்கு மட்டுமே ஒரு கடை இருக்கு அப்படின்னு சொன்ன கடைதான் இந்த JMS சர்பத் கடை. பல பல வருசமா இவங்க அவங்களே தயாரிச்ச சர்பத், சோடா விக்கிறாங்க. இங்க வெறும் சர்பத் மட்டும்தான்.

இங்க சர்பத் ரெண்டு வகை...ஒண்ணு தண்ணி ஊத்தி, ரெண்டாவது சோடா ஊத்தி. அந்த கடைகாரர் சர்பத் போடற வேகத்தை பார்த்தா நமக்கு தலையை சுத்தும்....அப்படி ஒரு ஸ்பீடு. சல்லுன்னு க்ளாசை கழுவி, எலுமிச்சம்பழத்தை புளிஞ்சி விட்டு, நன்னாரி சர்பத்தை அளவா ஊத்தி, சோடாவை லாவகமா உடைச்சி அதில் ஊத்தி ஒரு கலக்கு கலக்கி குடுத்தவுடன் அதை அந்த வெயிலுக்கு இதமா குடிச்சா......
சொர்கம்ன்னா அது இதுதான்னு தோணும். இந்த கடை சர்பத் ரொம்பவே பேமஸ், இவர்களே தயாரிக்கும் நன்னாரி சர்பத் ஆதலால் ருசி மிகவும் நன்றாக இருக்கிறது. முதலில் நானும் இங்கு செல்லும்போது "அட, இதுவும் ஒரு சர்பத் கடைதானே" என்று தோன்றியது, ஆனால் குடித்து பார்த்தவுடன்தான் இது எல்லாவற்றையும் போல அல்ல என்று உறுதியானது.

கண்டிப்பாக நீங்கள் திண்டுக்கல் பக்கம் போனா இங்க போய் ஒரு சர்பத் சாப்பிட்டு பாருங்க, ஒரு வித்யாசமான அனுபவமாக இருக்கும்.

பஞ்ச் லைன் :
சுவை               -      வெயிலுக்கு இதம் - தொண்டைக்கு குளிர்ச்சி - நாவுக்கு சுவை , கண்டிப்பாக சோடா சர்பத் மிஸ் செய்யாதீர்கள்.
அமைப்பு         -       ரொம்ப ரொம்ப சின்ன இடம், பார்கிங் வசதி கிடையவே கிடையாது. கோட்டை மாரியம்மன் கோவிலில் பார்க் செய்து விட்டு நடந்து செல்லலாம்.
பணம்              -      கொடுக்கும் விலைக்கு சரியான சுவை ! ஐந்து ரூபாய்தான் !

சர்வீஸ்           -       சூப்பர் !

 

6 comments:

  1. சர்பத்...சுவை...அதிகம் நான் விரும்பி குடிப்பது நன்னாரி சர்பத் தான்,

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு. ஜீவானந்தம் !! தங்களது ஒகேனக்கல் பயண கட்டுரை அருமையாக இருந்தது. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  2. நான் மதுரையில் இருக்கும் போது சிறுவயதில் நான் விரும்பி குடிப்பது நன்னாரி சர்பத் தான்,

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  3. நான் எப்பொழுது திண்டுக்கல் போனாலும் 10 பாட்டில்கள் வாங்கி வந்து விடுவேன்.16 ரூபாய் ஒரு பாட்டில் என ஆரம்பித்து இப்போ 50 ரூபாய் ஆகி உள்ளது.முன்பெல்லாம் மிகவும் நல்லாயிருக்கும் இப்போ வெறும் சுகர் மட்டுமே மிஞ்சி ருசிக்கிறது.

    ReplyDelete
  4. தஞ்சையில் வசித்த பொது கோடை காலத்தில் விரும்பி அருந்துவேன்.
    பழைய நினைவுகள் வருகிறது படித்த பிறகு.
    நன்றி.

    Tamil Online

    ReplyDelete