Wednesday, October 3, 2012

உலக திருவிழா - Albuquerque பலூன் திருவிழா

 சிறு வயதில் இருந்து எல்லோருக்கும் பலூன் என்றாலே குதூகலம், அதுவும் பெரிய வெப்ப பலூனில் பயணம் செய்வது என்றால் எவ்வளவு சந்தோஷம். ஒரு பலூனை பார்க்கும்போதே நமக்கெல்லாம் சந்தோசமாக இருக்கும், அதுவும் ஒரே இடத்தில் பல பல பலூன்கள், பல வித வண்ணங்கள், வடிவத்தில் இருந்தால் அங்கே சந்தோசத்திற்கு குறைச்சல் இருக்குமா என்ன ? நியூ மெக்ஸிகோவின் Albuquerque நகரத்தில் அடுத்த மாதம் 6 முதல் 14 தேதிகளில் நடைபெறபோகும் இந்த வெப்ப பலூன் திருவிழாவில் பங்கேற்க இன்றிலிருந்தே மக்கள் தயாராக ஆரம்பித்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்...Albuquerque பலூன் திருவிழா








நியூ மெக்ஸிகோவின் புகழ் பெற்ற ரேடியோவான KOB, 1972-ம் ஆண்டு தனது ஐம்பதாவது ஆண்டு விழாவை கொண்டாட இருந்தது. அந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்களை கவரவும், ஒரு வித்தியாசம் வேண்டும் என்பதற்காகவும் அங்கு மேனேஜராக இருந்த டிக் மெக்கீ என்பவர், அந்த ஊரில் இருந்த சிட் கட்டர் என்பவரிடம் அவரிடமிருந்த அந்த ஊரின் ஒரே வெப்ப காற்று பலூனை கேட்டார், அப்போது கேட்கப்பட்ட ஒரு கேள்விதான் இந்த திருவிழா கொண்டாடத்திற்கு அடிப்படை, அந்த கேள்வி...."இதுவரை நடந்த வெப்ப காற்று பலூன் பங்கேற்ற பலூன்கள் எத்தனை ?". இங்கிலாந்தில் ஒரு முறை 19 பலூன்கள் பங்கேற்றன, அதை நாம் முறியடிக்க வேண்டும் என்று ஆட்களை திரட்டினர், முடிவில் 13 பலூன்கள் மட்டுமே கலந்து கொண்டன....யாருக்கும் அன்று தெரியாது அன்றுதான் ஒரு முக்கிய உலக கொண்டாடத்திற்கு ஒரு பிள்ளையார் சுழி அன்று போடப்பட்டது என்று !!





1975 வரை அது ஒரு வெப்ப காற்று பலூன் பறக்கும் திருவிழாவாக இருந்தது, பின்னர் அதை ஒரு போட்டியாக மாற்றியபோது எல்லோரும் ரசிக்க ஆரம்பித்தனர். அதை ஒரு உலக அளவு போட்டியாகவும் மாற்றினர். இப்படி ஒவ்வொரு வருடமும் நிறைய பேர் கலந்து கொள்ள ஆரம்பித்து, கடந்த 2000-ம் வருடத்தில் சுமார் 1019 பலூன்கள் கலந்து கொண்டு அந்த சிறிய நகரத்தின் வானத்தை இருட்டடிததால் அன்றிலிருந்து மொத்தம் 600 பலூன்களுக்கு மட்டுமே அனுமதி என்று மாற்றி அமைக்கப்பட்டது. அதுமட்டும் அல்ல, எல்லா பலூனும் ஒரே வடிவத்தில் இருந்ததால் விதிகள் தளர்த்தப்பட்டு இன்று பல பல வடிவத்தில் பறக்கிறது !!







அதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்...பலூன் திருவிழா


இந்த வெப்ப காற்று பலூன் என்பதே ஒரு அதிசயம்தான். அது எப்படி பறக்றது என்பதை தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வம் வந்து இருக்கும் இல்லையா ? வெகு சின்ன யுக்திதான்...வெப்ப காற்று லேசாக இருக்கும், ஆதலால் அதை நீங்கள் அடைத்து வைக்கும்போது மேலே செல்லும், அதையே இந்த வெப்ப காற்று பலூனில் பயன்படுத்துகின்றனர். கீழே உள்ள படத்தினை பாருங்கள் உங்களுக்கே புரியும்...







என்ன அடுத்த வருடம் இந்த பலூன் திருவிழாவுக்கு தயாராகி விட்டீர்களா ? சரி என்ன வடிவத்தில் பலூனை பறக்க விட போகிறீர்கள் ?!!

No comments:

Post a Comment