Monday, October 22, 2012

அறுசுவை - திருச்சி கண்ணப்பா செட்டிநாடு ஹோட்டல்

திருச்சி என்றால் நம் நினைவுக்கு வருவது மலைகோட்டை, ஸ்ரீரங்கம் கோவில்கள். அதை சுற்றி பார்த்து விட்டு வயிறு பசிக்க ஆரம்பித்துவிட்டது என்றால் நாம் நினைக்க வேண்டியது "கண்ணப்பா செட்டிநாடு ஹோட்டல்". திருச்சியில் யாரிடம் கேட்டாலும் இதைதான் சொல்கின்றனர்.
நாங்கள் ஒரு மதிய வேளையில் நல்ல பசியுடன் சென்று இருந்தபோது நண்பர்களிடம் எந்த ஹோட்டல் நன்றாக இருக்கும் என்று கேட்டோம், எல்லோரும் சொன்னது இந்த ஹோடேல்தான். தில்லை நகரிலும், மன்னார்புறத்திலும் இருக்கிறது இது. நுழைந்தவுடன் திருச்சி வெயிலுக்கு இதமான AC முகத்தில் அறைகிறது, பின்னர் உங்களை வழி நடத்தி உட்கார வைக்கின்றனர், பின்னர் வரும் குளிர்ச்சியான தண்ணீர் என்று உள்ளே நுழைந்ததும் உங்களுக்கு ஒரு சந்தோசமான உணர்வு தருகிறது.

நாங்கள் மீல்சும், பரோட்டா, நாட்டு கோழி பிரை, கோலா உருண்டை, செட்டிநாடு சிக்கன் மசாலா என்று ஆர்டர் செய்தோம். எல்லாமே சூடாக, சுவையாக இருந்தது. அதுவும் நாட்டு கோழி பிரை நல்ல சுவை. இவர்களிடம் இது மட்டும் இல்லாமல் முயல், காடை, கௌதாரி என்று பலவும் கிடைகின்றன. பக்கத்துக்கு டேபிளில் மீன் துண்டு வறுவல் எங்களை இழுத்தது !!
நல்ல பார்கிங் வசதி, தரமான உணவு, நல்ல சர்வீஸ் என்று அவர்களின் எல்லாமே நன்றாக இருந்தது, அதனால்தான் எல்லோரும் இதை சொல்லி வைத்தார் போல் எங்களுக்கு சிபாரிசு செய்தனர் போலும் !! திருச்சி சென்றால் யோசிக்காமல் இங்கு செல்லுங்கள் சுவையும், சர்வீஸ் அமர்க்களம்.


பஞ்ச் லைன் :
சுவை               -      அமர்க்களம், இதை விட நல்ல சுவை வேறு எங்கும்
கிடைக்காது என்று தோன்றுகிறது.
அமைப்பு         -       சரியான இடத்தில் அமைந்திருகிறது.  தில்லை நகரிலும், மன்னார்புறத்திலும் இருக்கிறது. பார்கிங் வசதி உண்டு.
பணம்              -      திருச்சிக்கு சற்று காஸ்ட்லி !

சர்வீஸ்           -       சூப்பர் !

மெனு கார்டு :



1 comment:

  1. இருமுறை சென்றதுண்டு...

    படங்கள்... யப்பா...!!!

    நன்றி...

    ReplyDelete