Monday, November 12, 2012

அறுசுவை - சென்னை "ப்ரூட் ஷாப் ஆன் கிரீம்ஸ் ரோடு"

 இந்த வாரம் சென்னையில் இருந்தேன்....வெயில் மண்டையை பிளந்தது. நா வறண்டு ஏதாவது நல்ல ஜூஸ் குடிக்க வேண்டுமென்று மனமும், உடம்பும் என்னை படுத்தி எடுக்க, எனது நண்பன் இந்த கடைக்கு அழைத்து சென்றான், உண்மையிலேயே இங்கு எனது மனம் குளிர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும் ! நான் இவர்களது மீனம்பாக்கம் பாரத பெட்ரோலியம் உள்ளே உள்ள சிறிய கடையில் சாப்பிட்டேன்....ஆனால் இவர்களது கிளைகள் கிரீம்ஸ் ரோடு, கீழ்பாக்கம், பெசன்ட் நகர், ஸ்பென்சர்ஸ், இசிஆர் ரோடுகளிலும் உள்ளது.

இவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...ப்ரூட் ஷாப் ஆன் கிரீம்ஸ் ரோடு


சிறிய கடை...ஆனால் சுவையான ஜூஸ் !


உள்ளே பழங்களை பற்றி குறிப்புக்கள் !!
இவர்களது ஸ்பெஷல் என்பது சுத்தமான இடம், குளிர்ச்சியான சூழல், இனிமையான இசை, பல வகை மெனு, சுவையான பழங்கள், நல்ல சர்வீஸ் என்று சொல்லலாம். நாங்கள் ஒரு கோகோனுட் புட்டிங், ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் மற்றும் மேங்கோ - பனானா ஜூஸ் ஆர்டர் செய்தோம். அந்த இடத்தையும், மெனு கார்டையும் பார்த்து முடிபதற்க்குள் எங்களுக்கு கோகோனுட் புட்டிங்  விட்டது.....அதை சுவைத்து முடிபதர்க்குள் ஜூஸ் வந்து விட்டது, விரைவான சேவை !!




நல்ல திக்கான ஜூஸ், குடிக்க குடிக்க தொண்டைக்கும், வயிற்றுக்கும் ஒரு குளிர்ச்சி பரவுவதை நீங்கள் உணர்வீர்கள். மற்ற எல்லா கடைகளிலும் பிரெஷ் ஜூஸ் மட்டும் கிடைக்கும், அதையும் வேர்வை வடிய குடிக்க வேண்டும்....ஆனால் இங்கு மனதும், உடம்பும் ஒரு குளிர்ச்சியை அனுபவிப்பதால் கொடுக்கும் காசுக்கு ஏற்றதுதான்  என்பேன். எப்போதாவது யாரையாவது நீங்கள் சந்திக்க வேண்டுமென்றால் நீங்கள் இங்கு நம்பி செல்லலாம் என்பேன் !

பஞ்ச் லைன் :
சுவை               -      ரொம்பவே சூப்பர் !!

அமைப்பு         -       சிறிய இடம், ஆனால் தாராளமாக உட்கார்ந்து குடிக்கலாம். AC உள்ளது !

பணம்              -      கொடுக்கும் விலைக்கு சரியான சுவை ! இருவருக்கு நன்றாக சாப்பிட்டாலும் 120 ரூபாய் வரும் ! விலை பட்டியல் கீழே உள்ளது, பாருங்கள் !
சர்வீஸ்           -       சூப்பர் ! ரொம்ப விரைவாய் இருக்கிறது ! 


14 comments:

  1. ம்ம்ம்.. ஒரு முறை முயன்று பார்க்கிறேன். நன்றி. உங்களுக்கு என் இதயம் நிறைந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்ள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி திரு.பால கணேஷ் ! தங்களது தீபாவளி இனிதே முடித்ததா ?

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி அஜீம்பாஷா ! தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் !

      Delete
  3. அருமையான படங்கள்... தகவல்கள்...

    நன்றி...

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் ! தங்கள் தீபாவளி வாழ்த்துக்களால் எனது வலைபதிவு இன்னமும் பொலிவும், வண்ணமயமும் ஆனது !

      Delete
  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    ReplyDelete
    Replies
    1. பொறுமையாக வார்த்தைகளை கோர்த்து வாழ்த்துக்களை சொல்லி இருகின்றீர்கள் நண்பரே ! உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் !

      Delete
  5. சில நாள் முன்தான் கிரீம்ஸ் ரோடு சென்ற போது இக்கடையை பார்த்தேன் ; ஒருமுறை முயற்சிக்கணும்

    Happy Diwali to you

    ReplyDelete
    Replies
    1. நன்றி மோகன் ! உங்களது பயணங்கள் பதிவுக்கு எல்லாம் நான் அடிமை என சொல்லலாம், உங்களது பதிவை படித்தால் அந்த இடத்திற்கு சென்று வந்த உணர்வு வருகிறது !

      Delete

  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் ! தங்களது வாழ்த்துக்கள் எனது வலைபூவிற்கு சிகரம் என்றால் அது மிகை ஆகாது....உங்களது உற்சாகமான வார்த்தைகள் எப்போதும் என்னை இன்னும் நன்கு எழுத தூண்டுகிறது !

      Delete
  7. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
    மங்களம் நிறைய,
    மகிழ்வொடு வாழ்த்துவம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ! உங்களது வாழ்த்துக்களுக்கும், அவ்வபோது இடும் கருத்துக்களுக்கும் !

      Delete